Tuesday 3 October 2017

        

அன்பார்ந்த அறிஞர் பெருமக்களே! ஓர் பணிவான வேண்டுகோள்!
       
தயை கூர்ந்து, இப்பதிவினை படித்து, தங்களது மேலான,
கீழான, நேர்மறையான, எதிர்மறையான ஏதோவொரு கருத்தினை
பதிவிட்டுச் செல்லுமாறு, தாழ்மையுடன் வேண்டிக்கேட்டுக் கொள்கிறேன்!

                                                                      நன்றி!                                                             
     
  லூசாப்பா
, நீ?


       31+
     நீங்கள், சுயநலக்கார்களாக, நான் சம்பாதிக்கும் அனைத்தும் எனக்கே சொந்தம், என்று வாழ விரும்பினால், தயவுசெய்து குழந்தை பெற்றுக் கொல்லாதீர்! அல்லது, நீங்கள் குழந்தை பெற்றுக்கொண்டால், அந்த வினாடி முதல், உங்களுக்காக வாழ்கின்ற வாழ்க்கை, முற்றுப்பெற்றது!
    
     திருமணம் செய்வதற்க்கான தகுதியும், குழந்தை பெறுவதற்க்கான தகுதியும் ஒன்றல்ல! நாம், குழந்தையை பெறாமலேயே, பெற்றோர் ஆகிவிட முடியும்ஒரு குழந்தையை பெற்றுவிட்டோம் என்பதற்க்காக, நாம் பெற்றோர் ஆகிவிட முடியாது ஏன்னென்றால்
அது நம் கடமையை செய்வதை பொருத்திருக்கிறது!

 எது கடமை? எது வரை நம் கடமை?
* குழந்தையை படிக்க வைப்பது வரையா?
* அதை, இச்சமூகம் போற்றும்படி வளர்ப்பது வரையா?
* அதற்க்கு திருமணம் முடிக்கும் வரையா? இல்லை,
 அது பெற்றோரின், கடைசி மூச்சு உள்ளவரை தொடரும்!

     அப்படியென்றால், மகனின் கடமைதான் என்ன? அவன் கட்டியவளுக்கும், அவன் குழந்தைகளுக்கும், பாதுகாப்பு அரணாக இருப்பதுவே, அவன் தலையாய கடமை! அப்படியென்றால், தாய் தந்தைக்கு, மகன் செய்ய வேண்டிய கடமையென்று, எதுவுமே இல்லையா? இருக்கிறது,

     அது, அவன் தாய் தந்தைக்கு செய்யும், இறுதிச்சடங்கு மட்டுமே! ஏன்??? இவ்வுலகில், பெற்றோர் விருப்பத்தினால்தான், குழந்தை உருவாகிறதே தவிர, குழந்தையின் விருப்பத்தினால், பெற்றோர் உருவாவதில்லை, அதனால்!

     நான், என் குழந்தைகளை படிக்கவெச்சுடேன், அப்பாடா! என் கடமை முடிந்தது. நான், என் குழந்தைகளுக்கு திருமணம் செய்துவெச்சுட்டேன்அப்பாடா! என் கடமை முடிந்தது என்று, அப்பாக்கள் சொல்லித்திரிகிறார்கள்லூசாப்பா நீ? கடமை முடிந்தவனுக்கு இங்கெனையா வேலை??? எனக்கொரு கடமை இருக்கிறது, என்று நினைப்பவர் மட்டும் இருங்க! என் கடமைகள் எல்லாம், என்றைக்கோ முடிந்தது என்றுரைப்பவர்கள், அன்றைக்கே போயிருக்க வேண்டும்! இன்னும் இருந்து கொண்டு, இருப்பவன் கடமையைச் செய்ய, இடையூறு செய்யாதீர்!
               
                                  1

குழந்தை பெறும், தம்பதிகள் எதை புரிந்துகொள்ள வேண்டும்?      

* தங்கள் விருப்பத்தினால், பெற்ற குழந்தைகளுக்காக, தங்களையே
முழுவதும் அர்ப்பணிப்பவர்களாக, பெற்றோர் வாழ்ந்திட வேண்டும்!

* தங்கள் குழந்தையின் திருமணத்திற்க்கு பிறகு, பெற்றோர் தங்களுக்கென்று எந்த ஒரு சொத்துக்களோ, சேமிப்புகளோ வைத்துக்கொள்ள கூடாது!

* தங்கள் இறுதி மூச்சு உள்ளவரை, பெற்றோர் உழைத்தே உண்ண வேண்டும்!

* அதில் மீத தொகையை, பெற்றோர் தங்கள் பெயரிலேயே, காப்பீடு செய்ய வேண்டும்!

* பெற்றோரின் இறுதி மூச்சு, கடமையை செய்து கொண்டிருக்கும் போதுதான், போகவேண்டும்!

* பெற்றோர் கட்டிய வீடு, அவர்கள் சம்பாதித்த பணம் மட்டுமல்ல, தலைகள், கைகள், கால்கள், ரத்தம், நாடி, நரம்பு, பெற்றோரின் உடலில் உள்ள அனைத்து அணுக்களுமே, அவர்கள் பெற்ற பிள்ளைகளுக்கே சொந்தம்!

* பெற்றோர், தன் பிள்ளைகளுக்கு சோறுபோட வேண்டும் என்பது, கடமைபிள்ளைகள், தன் பெற்றோருக்கு சோறுபோட வேண்டும் என்பது, பிள்ளைகளின் தனிப்பட்ட விருப்பம்!

* மகன், அவன் குடுப்ப கடமையை செய்தது போக, மீதமுள்ள பணத்தில், தன் பெற்றோருக்கு சோறுபோட நினைத்தால், தன் பெற்றோருக்கு ஓய்வளிக்க நினைத்தால், அதை பெற்றோர், பணிவோடு ஏற்றுக்கொள்ள வேண்டும்!

* கடமையை செய்வதற்க்கான, உரிமை மட்டுமே நமக்கு உள்ளது, அதற்க்கான பலனை எதிர்பார்கின்ற உரிமை, நமக்கு கிடையாது!

இதை புரிந்து கொள்ளாமல், யார் யாரை உரிமை கொண்டாடுவது?????  
                                   2

     நீங்கள், ஒரு அனாதை குழந்தையை தத்து வளர்த்தாலும் கூட, அவர்களிடத்திலும் எதையும் எதிர்பார்க்க கூடாத சமயத்தில், உங்கள் பாலுறுப்பு சுகத்திற்க்காக, நீங்கள் ஆணாக, பெண்ணாக, இச்சமூதாயத்தில் நிரூபிப்பதற்க்காக, ஒரு குழந்தையை பெற்றுக்கொண்டு, எங்களால தான்  இந்த உலகத்துக்கு வந்தாங்க, அதுகளுக்கு நாங்கதான் கடவுள், அது தினமும் எங்க காலை தொட்டு கும்பிடனும், அது எங்களுக்கு நல்லபேரு வாங்கி கொடுக்கனும்அது நிரைய சம்பாதிச்சுட்டு வந்து, என் கையில் கொடுக்கனும், என்றெல்லாம் எதிர்பார்ப்பது சரியா??? இது போதாத குறைக்கு, இதை செய்யவில்லை என்றால், சாபம் வேர விடுவாங்களாம்! 
டேய் நாயேநீ! நாஸ்மா போயிருவீடா! வெலங்கமாடீடா! என்று!
    
     ரெண்டாயிரம் வருசத்துக்கு முன்னாடியே சொல்லிவெச்சாங்கோ! தென்னைய வெச்சா தண்ணீரு! பிள்ளைய பெத்தா கண்ணீருன்னு! தெரிதில்ல, அப்புறம் எதுக்குங்கையா, பெத்துக்கிறீங்க? யாரை கேட்டு பெத்தீங்க? யார் உங்களுக்கு அந்த உரிமையை கொடுத்தது? என் ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்க, எதற்க்காக பெற்றுக்கொள்கிறீர்கள்?

* ஒரு குழந்தை இறந்துவிட்டால், இன்னொரு குழந்தை ஆருதலாக இருக்கும் என்று நினைத்து, பெற்றீர்களா? அப்படியானால், ஒரு மனைவி இறந்து விட்டால், இன்னொரு மனைவி ஆருதலாக இருப்பாள் என்று நினைத்து, இன்னொரு திருமணம் ஏன் செய்யவில்லை, தந்தையே???  

* என் கடைசி காலத்தில், கொல்லிப்போட எனக்கு ஒரு மகன் வேண்டும்! என்று பெற்றீர்களா? ஏன் தந்தையே! நான் பிறந்து, 30 ஆண்டுகளுக்கு பிறகோ அல்லது 40 ஆண்டுகளுக்கு பிறகோ சாவீங்க! அதுவரை நான், சுடுகாட்டில் தீப்பந்தத்தை கையில் பிடித்துக்கொண்டு, உட்கார்ந்திருக்க வேண்டுமா என்ன???
                                       
* எனக்கு நல்ல பெயர் வாங்கிகொடுக்க, உன்னை பெற்றேன் எங்கிறீர்களாஉங்களுக்கு நற்ப்பெயர் வேண்டும் என்றால், நீங்கதான் கஷ்டப்பட்டு வாங்கனும்அதற்க்காக நான் போராட வேண்டுமா தந்தையே???

* காரணம் இல்லாமல், காரியம் இல்லை என்றால், அப்போது காரணம் என்ன? என்று, கேள்வி எழுப்புவது குற்றமா தந்தையே???

                                 3

     அன்பு என்பது யாதெனில், நாம் எதை யாருக்குச் செய்தோம் என்பது, நம் நினைவில் இல்லாமல் போவதே, அன்பு! பத்து மாதம் சுமந்து பெத்தோம், பத்து வயசுல சைக்கிள் வாங்கி கொடுத்தோம் என்று, தாம் செய்ததை பட்டியலிட்டு, தங்கள் வாழ்நாள் முழுவதும், சொல்லிக்கொண்டிருப்பது அன்பகுமா???
    
     தாய்மை என்பது யாதெனில், தன் பிரசவ வேதனைகளை, பிறரிடம் கூறுவது தாய்மையாகுமா? தாங்கொணா வேதனைகளை அனுபவித்து, குழந்தைகளை ஈன்றெடுத்த போதிலும், என் வாழ்வில் எவ்வித உடல் சார்ந்த வலிகளையும், நான் அனுபவித்ததே இல்லை! என்று, எந்த பெண்ணால் உரகச் சொல்ல முடிகிறதோ, அவளே புனிதத்தாய்! அவளே தெய்வத்தாய்! அவளே தெய்வத்தின் தாய்! பெண்மையின் பெருமைகளை, தாய்மையின் பெருமைகளை,
பெண்களே! பேசிக்கொண்டிருப்பது பெருமையல்ல! அதைச் சொல்வதற்க்கான உரிமை, மற்ற பாலினத்தவருக்கே உண்டு!  

     பெத்தவங்க பத்து மாதம் சுமந்து பெத்தாங்க, மகனை சீராட்டி, பாராட்டி, கஷ்டப்பட்டு, பாடுபட்டு வளர்த்தாங்க, அவங்க வீடு, நிலத்த வித்து, மகனை எஞ்ஞினிரிங், டாக்டருக்கு படிக்க வெச்சாங்க, இப்ப அவன், பெற்றோரை தெருவில் விட்டுட்டு போய்டானுங்க, மருமகள் கூருகெட்டள், மகன் கேடுகெட்டவன் என்று, பெற்றோருக்கு ஆதரவாக பேசுவதை, தயவுசெய்து நிறுத்துங்க!
                                                           
* பிள்ளைகளுக்கு உரிமையானவர்கள்தான் நாங்கள்! என்பதை ஒப்புக்கொள்ளும், உயர்ந்த பெற்றோர்களாக, உங்களால் வாழமுடியவில்லை, சரி பரவாயில்லை.

* பிள்ளைகள்தான், பெற்றோருக்கு உரிமையானவர்கள் எங்கிறீர்கள்! சரி பரவாயில்லை, அந்த உரிமையையும் நான் விட்டுக்கொடுக்கிறேன்!
                                       
* மருமகளை, திட்டி காயப்படுத்திக் கொண்டேயிருப்பதற்க்கும், பெற்றோருக்கு முழு உரிமை உண்டு, என்று வாதம் செய்தால், என்னதான் செய்வது??????????
                                     
     ஏழு வயதில், வாத்தியார் அன்பாக கற்றுதந்த, கோடாரி கதை நினைவிருக்கிறதா? எது உங்களுக்கு உரிமையானதோ, அதை மட்டும் உரிமை கொண்டாடினால், எல்லா உரிமைகளும் கிடைக்கும்! எல்லாமே எனக்கு உரிமையானதுதான் என்றால் என்னவாகும்???

                                 4

     நான், பெற்றோருக்கு என்றும் நன்றியுடன் இருப்பேன், ஆனால் நாயாக அல்ல! ஏனென்றால், நான் நாய் அல்ல! அதை, பெற்றோர் புரிந்துகொள்ள வேண்டும்.

     பெற்றோரின் சரீரத்தைச் சாய்ப்பது, என் நோக்கம் அல்ல. அவர்களின் அறியாமையை, அகங்காரத்தை வீழ்த்தி, அவர்கள் யார் என்பதையும், அவர்கள் கடமை என்ன என்பதையும் உணர்த்தி, மெய்ஞானம் எனும் வெகுமானத்தை, அவர்களுக்கு பெற்றுத்தருவதற்க்காக, நான் பெற்றோரை அவமதிக்கின்றேன்!

* கடமைகளை, செய்யாமலிருப்பதும் குற்றம்!
* செய்த கடமைகளை, பட்டியலிட்டுச் சொல்வதும் குற்றம்!!
* செய்த கடமைகளுக்கு, பலனை எதிர்பார்ப்பதும் குற்றம்!!!

     அப்போது, நான் ஏன் கடமையை செய்யனும்? என்பது, உங்கள் கேள்வி என்றால், அதற்க்கு நான் பதில் சொல்கிறேன்,

* மனிதனின் கடமை எங்கிருந்து துவங்குகிறது?
கேள்வி கேட்பதிலிருந்து துவங்குகிறது!

* மனிதனின் கடமை எங்கு முடிகிறது?
தன்னுள் எழும் கேள்விகளுக்கு, சரியான பதிலை தெரிந்துகொள்வதில் முடிகிறது!

* நீங்கள், ஒரு கேள்வி கேட்டுவிட்டாலே, கடமையை செய்ய துவங்கிவிட்டீர்கள், என்றுதான் அர்த்தம்!

* கடமையை செய்ய, உங்களுக்கு விருப்பம் இல்லை என்றால், கேள்விகளே கேட்காதீங்க!
                                  
* கேள்விகள் கேட்டால்தான், கடமைகளை செய்யமுடியும்! கடமைகளை செய்தால்தான், கேள்விகள் கேட்க முடியும்!

                                5

1) எங்கப்பன் மூஞ்ஜியை, நான் பார்க்கவேயில்லை, அவன் எனக்காக எதையும் விட்டுச் செல்லவில்லை, இவை அனைத்தும் நானே சுயமாக சம்பாதித்தது. அதை நான், என் மகனுக்கு ஏன் கொடுக்கனும்? வேண்டுமென்றால்அவன் சுயமாக சம்பாதிக்கட்டும்.
* எங்கதாத்தா, எங்கப்பனுக்கு எதுவுமே செய்யல, எங்கப்பன் எனக்கு எதுவுமே செய்யல, அப்புறம் நான் எதற்க்காக, என் மகனுக்கு செய்யனும்?..........................
                                   
2) என் தந்தை முகத்தை நான் பார்த்ததேயில்லை, அவர் எனக்காக எதையும் விட்டுச் செல்லவில்லை என்றாலும் கூட, என் மகனுக்காக நான், அனைத்தையும் விட்டுத்தருவேன்!
* என் தாத்தா, என் தந்தைக்கு எதையும் விட்டுச் செல்லவில்லை, ஆனாலும் என் தந்தை, எனக்காக தன்னையே அர்ப்பணித்து வாழ்ந்தார்! நான், என் மனைவி குழந்தைகளுக்காக, என் பெற்றோருக்காக, என்னை அர்ப்பணித்து வாழ்வேன்…………….

இந்த இரண்டில், எது வளமான எதிர்கால சமுதாயத்தை, உருவாக்கப்போகிறது?

* தன் துணையை, 64 விதமாக புணர்வது எப்படி, என்பதை கற்றுக்கொண்டு, குழந்தை பெற்றுக்கொள்வதில் காட்டும் ஆர்வம், குழந்தை வளர்க்கும் கலையை, கற்றுக்கொள்வதில் காட்டுவதில்லை, கீழ்நிலை பெற்றோர்!
                             
* நாம், உயர்நிலை பெற்றோர்களாவதற்க்கு, ஆணாக இருக்கவேண்டுமா? பெண்ணாக இருக்க வேண்டுமா? திருநங்கையாக இருக்கவேண்டுமா? திருமணம் செய்திருக்க வேண்டுமா? கட்டிபிடித்து உருள வேண்டுமா? பத்துமாதம் சுமக்க வேண்டுமா? என்பது, எதுவுமே அவசியம் இல்லை!
                                 
* நாம், எதை பெரும்போது, பெற்றோர்களாக ஆகிறோம்? தன் எதிர்கால சந்ததியினருக்காக, தன்னையே அர்ப்பணம் செய்கின்ற, மனதை பெரும்போதுநாம் பெற்றோர் ஆகிறோம். அந்த மனநிலையை, யாரெல்லாம் பெருகிறார்களோ, அவர்கள்தான், உண்மையான தாய் தந்தை!
                                  6

     நான் உங்களை, அன்னை தெரசா ”, “ அப்துல் கலாம்  மாதிரி வாழுங்க! என்று கூறவில்லை. குறைந்தபட்சம், உங்கள் குழந்தைகள் மீதாவது, உண்மையான அன்பை செலுத்துங்க, என்றுதான் கூறவிரும்புகிறேன்!              

     வீட்டை சுத்தமாக வைத்திருந்தால், நாடே சுத்தமாயிருக்கும் என்பதற்க்கு, வீட்டிலுள்ள குப்பைகளை, தெருவில் கொட்டனும், என்பது அர்த்தம் அல்லநம் வீட்டிலுள்ள உறவுகளை, சுத்தமாக வைத்திருக்க வேண்டும்! நம்முடைய உறவினர்களிடம், நமக்குள்ள உரிமைகளின் எல்லை எது? என்பதை, நாம் தெரிந்திருக்கவேண்டும்!
            
     பழைய சோற்றைத் திண்ர வேகத்தில், வாழ்வின் சரியான பாதையை கண்டுகொண்டதாக, நான் நினைப்பது சரியா? அதில் மற்றவர்களையும், அழைப்பது சரியா? நான் இவ்வளவு காலம், இப்பூவுலகில் வாழ்ந்து, கற்றுக்கொண்ட பாடங்கள் சரியா? என்பதை, நான் எவ்வாறு தெரிந்துகொள்வது? அதனால்தான், இதை எல்லோரிடமும் பகிர்ந்து கொண்டேன்!
    
     சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்ததால், சாக்கடைக்கு ஏதேனும் நன்மையா? தீமையாபூஜையறைக்கு, பூ வாங்கி போடுவதால், இறைவனுக்கு, ஏதேனும் நன்மையா? தீமையா?

* நாம், எந்த செயலை செய்கிறோம் என்பது முக்கியமல்ல! அந்த செயலை செய்யும் போது, நம் மனநிலையில், அதன் நோக்கம் எதுவாக இருந்தது, என்பதை பொருத்தே, நம் வாழ்க்கை அமைகிறது

உங்கள் நண்பர்களுக்கு, என் blogன் முகவரியை அனுப்புங்க, மற்றும் உங்கள் கருத்துக்களை, என்னுடன் பகிர்ந்துகொள்ள,

www.lusappani.blogspot.in                         what's app +91 9790600183           
www.facebook.com/ramukavis83               ramukavis1983@gmail.com                  
                                  நன்றி……        
                  
                        யுத்தம் செய்ய விரும்பு
                    ஆயுதங்களால் அல்ல, காகிதங்களால்!
                                                                 இப்படிக்கு,
                                                          
 ப.சிவக்குமார்.

தாயே பராசக்தி! 2013 www.ramukavis1983.blogspot.in
லூசாப்பா, நீ? 2017 www.lusappani.blogspot.in
இப்பொழுது! 2020 www.eppoluthu.blogspot.in

            


                                   

41 comments:

  1. நல்ல சிந்தனைகள். ஆனால் இதை மேலும் ஆராயந்து நம் கலாச்சாரத்திற்கு ஏற்றதாக மாற்றுங்கள். மனிதன் பண்புடன் வாழ வேண்டும். அந்தப் பண்பு என்றால் என்ன என்ற குழப்பத்திலிருந்து விடுபட திருக்குறள் ஒரு நல்ல வழி காட்டி.

    ReplyDelete
    Replies
    1. உங்களுடைய மேலான கருத்துக்களுக்கு, நன்றி ஐயா!

      நான் வளர்ந்த விதம், என் எழுத்துக்களில் மட்டுமல்ல, என் ஒவ்வொரு செயலிலும் பிரதிபலிக்கிறது! நான் என்ன செய்வது?

      நல்ல கருத்துக்களை, நல்ல விதமாக, ஆயிரம் பேர், இலட்சம் பேர் சொன்னார்கள்! ஆனால், அது யார் காதிலும் ஒலிக்கவில்லை!

      நான் ஆபாசமாகத்தான் எழுதினேன்! எழுதுகிறேன்! எழுதுவேன்! அதற்க்காக நான் யாரிடமும் மன்னிப்பு கோர விரும்பவில்லை! தண்டனைகளையே விரும்புகிறேன்!

      Delete
  2. Very nice. Keep it up. This is your style, don't change it.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஐயா! நீங்கள், என்னை பாராட்டியதற்க்காக அல்ல, என் blogஐ படித்ததற்க்கு!

      Delete
  3. உலகத் தமிழ் வலைப்பதிவர்கள் தங்கள் தளத்திற்கு வருவார்கள். தங்களுக்கு உதவுவார்கள். முடிந்த வரை உலகெங்கும் நற்றமிழைப் பேண வலை வழியே தங்கள் பங்களிப்பைச் செய்யுங்கள். தமிழ் உலகம் உங்களைப் போற்றும்.

    ReplyDelete
  4. வீட்டிலுள்ள குப்பையை சுத்தமாக்க குப்பையைத் தெருவில் கொட்டவேண்டும் என்பதல்ல அர்த்தம்- அருமையான வரிகள்.

    ReplyDelete
  5. Good one. Though I may not agree with few things personally.

    ReplyDelete
  6. http://tamilcheithi.com/commaon-man-writing-tamilcheithi/

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா!

      தங்களது வலைதளத்தில் எனது blogஐ, அறிமுகப்படுத்தியதற்க்கு நன்றி ஐயா!

      Delete
  7. உங்களுக்கு சரியெனப்படுவதை ஓங்கி உரைக்கிறீர்கள் எல்லோரும் ஒப்புக் கொள்ள வேண்டும் என்றில்லையே எப்படி நான் படிக்க வேண்டும் என்று விரும்பினீர்கள் தெரிந்து கொள்ளலாமா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா!

      தமிழ் மொழி தெரிந்த ஒவ்வொருவரும், என் பதிவை படிக்க விரும்பினேன் ஐயா! என் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள, யாரையும் கட்டாயப்படுத்தவில்லை ஐயா! என் தவறுகளை, யாராவது அடிக்கோடிட்டு சுட்டிக்காட்டினால், நான் ஏற்றுக்கொள்கிறேன்! என் கருத்துக்கள் சரியானவைதானா என்பதை, நான் எவ்வாரு தெரிந்து கொள்வது? அதை பிறரிடம் கூறினால்தானே சாத்தியம்!

      நன்றி ஐயா!

      Delete
  8. இக்காலகட்டத்திற்குத் தேவையான பல நல்ல கருத்துக்களை பகிர்ந்துள்ள விதமும், நடையும் அருமையாக உள்ளன. தொடர்ந்து எழுதுங்கள், வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. என் blogஐ படித்து, கருத்து கூறியதற்க்கு நன்றி ஐயா!

      Delete
  9. நண்பர் சிவக்குமார், உங்கள் கருத்துகளைத் தைரியமாக முன்வைத்துவிட்டீர்கள். சில கருத்துகள் புரியவில்லை. பல கருத்துகள் டாப்! குறிப்பாக கட்டத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் கருத்துகளில் இரண்டாவது!! அருமை. பெற்றோர் கடமை என்பதையும் விட குழந்தைகளிடம் அன்பு செலுத்தி குழந்தைகளுக்காகவே வாழ்ந்தால், பணம் சொத்து என்ற சொற்களுக்குள் உட்படாமல், ஒரு உதாரணமாக, போதனையை விட தாங்களே தங்கள் செயல்களின் மூலம் போதகராக இருந்தால் குழந்தைகள் வளர்ந்து வரும் போது தங்கள் குழந்தைகளையும் தாங்கள் தங்கள் அனுபவத்தில் கற்றதன்படி வாழ்ந்து அப்படியே அது வாழையடி வாழையாகத் தழைத்து நல்லதொரு குடும்ப அமைப்பு உருவாகும் இல்லையா

    துளசிதரன், கீதா

    ReplyDelete
    Replies
    1. என் blogஐ படித்து கருத்து கூறியதற்க்கு நன்றி ஐயா!

      உங்களுக்கு புரியாத கருத்துக்களுக்கு, என்னால் முடிந்த விளக்கத்தை தர விரும்புகிறேன்! நம் இருவரின் எண்ணங்களும் ஒன்றுதான். ஆனால், அதை சொல்லக்கூடிய விதம் வேறுபடுகிறது, அவ்வளவுதான்!

      நன்றி ஐயா!

      Delete
  10. புதிதாய் வலைத்தளம் தொடக்கமோ!! வாழ்த்துகள்! பாராட்டுகள்! தொடர்ந்து எழுதுங்கள்.

    ReplyDelete
  11. வாழ்த்துகள் நல்ல தொடக்கம்! தொடர்ந்து எழுதுங்கள்

    ReplyDelete
  12. ஒரு ஆச்சரியம் என்னவென்றால் நீங்க கொடுத்துள்ள தலைப்பு முக்கியமானது. இங்கே குழந்தைகளுடன் உண்டான விவாதங்களில் போது நாம் புரியாத மாதிரி நடிக்கும் போது குழந்தைகள் இப்படித்தான் சொல்லி அழைக்கின்றார்கள்.

    தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துகள்.

    ReplyDelete
  13. சகோதரா!
    தங்களின் எழுத்தை படித்தேன் சற்று யோசிக்க வைத்துவிட்டது.சிலது உடன்பாடு இல்லையெனினும் தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள். நன்றி...

    பாசுகரன்
    கோவை.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா!

      என் பதிவை படித்து கருத்துக் கூறியதற்க்கு, நன்றி ஐயா!
      ஐயா, தங்களுக்கு எது உடன்பாடு இல்லை என்பதை தெரிவிக்க வேண்டுகிறேன்! என் பதிவுகளை படித்துவிட்டு செல்பவர்கள், தயவுசெய்து என்னிடம், ஒரு கேள்வியாவது கேட்டுட்டு போங்க! இல்லை என்றால், சபித்துவிட்டு போங்க!

      Delete
  14. I am confused about this message. What's your balance for your family u left... I like to read but not practically suitable for the responsible gentleman. Thanks brother

    ReplyDelete
    Replies
    1. என்னால், இதை மொழி பெயர்த்து புரிந்துகொள்ள முடியவில்லை. தயவுசெய்து தமிழில் எழுதவும்!

      Delete
  15. There is missing of Tradition... KALAACHAARAM

    ReplyDelete
    Replies
    1. கலாச்சாரத்திற்க்கும், நாகரீகத்திற்க்கும் என்ன வித்யாசம்?

      * நம்முடைய முன்னோர்களின் பழக்க வழக்கங்களை, அப்படியே நாமும் பின்பற்றி நடப்பது கலாச்சாரம்.

      * நம்முடைய முன்னோர்களின், பழக்க வழக்கங்களில் உள்ள தவறுகளை, திருத்திக் கொண்டு நடப்பது நாகரீகம்.

      Delete
  16. வணக்கம்

    சிறப்பான கருத்தை இரசிக்கும் படி சிறப்பான தலைப்பில் சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்

    -நன்றி-
    அன்புடன்-
    -ரூபன-

    ReplyDelete
  17. திருமணம் முடிந்த பிறகு குழந்தை வேண்டும் என்று விரும்பிதான் பெற்றுக் கொள்கிறோம். குழந்தை தனது விருப்பம் சார்ந்து வளருகிறதா என்றால் இல்லை. தங்களுக்கு எது விருப்பம், எது லட்சியம் என்ற ஒன்றை வகுத்துக் கொண்டு குழந்தைக்கு பிடிக்கிறதோ இல்லையோ அதன் மீது வலுகட்டாயமாக திணித்து 'எல்லாம் உன் நன்மைக்காகத்தான்' என்ற சப்பைக்கட்டு வேறு.

    பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடம் 'உனக்கு நாங்கள் நல்ல பெற்றோராக இருக்கிறோமா?' என்றோ 'எங்களால் உனக்கு சந்தோசமா?' என்று கேட்டு பார்க்கவேண்டும். அதற்கு தைரியமாக பதில் சொல்லும் வாய்ப்பை கொடுத்து பார்த்தால் அப்போது புரியும் நாம் எத்தகைய பெற்றோர் என்று.

    நான் இன்றைக்கு உனக்கு இதை எல்லாம் செய்கிறேன், பதிலுக்கு நாளை என்னை நன்றாக பார்த்துக்கொள்ளவேண்டும் என்பதை போன்ற சுயநலம் வேறில்லை.
    எத்தகைய அழுத்தங்களையும் கொடுக்காமல் குழந்தைகளை வளர்த்தோம் என்றால் அத்தகைய குழந்தைகள் நாளை கண்டிப்பாக பெற்றோர்களை அன்பாகவே கவனித்துக்கொள்வார்கள் என்பது எனது கருத்து.

    தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள் !!

    ReplyDelete
  18. அம்மா! தாயே பராசக்தி!

    அடுத்த பிறவியிலாவது, உங்களுக்கு மகனாக பிறக்கவேண்டும் என்று தோன்றுகிறது! ஆனால், என் பெற்றோருக்கு மகனாக பிறந்ததால்தான், என்னால் ஞானம் பெற முடிந்தது! அதனால்
    நான் அவர்களை, ஒருபோதும் மறக்கமாட்டேன்!

    தங்களது கருத்துக்களுக்கு, நன்றி தாயே!

    ReplyDelete
  19. மிகவும் நன்று பாராட்டுகள்

    ReplyDelete
  20. மனதில் பட்டதை மற்றவர்கள் எப்படி எடுத்துக்கொள்வார்களோ என்ற தயக்கம் இல்லாமல் எழுதியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

    என் குழந்தைகள் அவர்களுக்கு எத்தனை வயதானாலும் என் குழந்தைகள்தான், அவர்களை சரியான பாதையில் செலுத்துவதும், அவர்கள் சுதந்திரமாக இயங்கவும் தன்னால் முடிவெடுக்கவும் அனுமதிப்தோடு, தவறு செய்யும்போது திருத்துவதும், பாதை மாறும்போது தடம்பிறழாமல் திருப்பி அழைத்து வருவதும் கடைசி வரை உனக்குத் தேவைப்படும் நேரத்தில் துணைக்கு நான் இருக்கிறேன் என்று நம்பிக்கை வளர்ப்பதும்தான் பெற்றோரின் கடமை.

    இதே கடமையை புரிந்துகொண்டு (தாளுண்ட நீரை தலையால் தருவதைப்போல) அவர்களும் ஆற்றுவாரெனில், மிக்க மகிழ்ச்சி. இல்லையெனில, அது நமக்கும் அவர்களின் பிள்ளைகளுக்குமான விதியென்றே எடுத்துக்கொள்ள வேண்டும்.

    நானும் புதிதாக எழுதுபவன்தான். உங்களுக்கு அறிவுரை சொல்லும் அருகதை எனக்கில்லை. நிறைய எழுதுங்கள். தெளிவு பிறக்கும்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா!

      பிறருக்கு அறிவுரை கூறும் அருகதை என்னவென்றால்,
      நம்மால் வாழ்க்கையில் எதை கடைபிடிக்க முடிகிறதோ,
      அதை பிறருக்கு அறிவுரையாக கூறுவதில் தவறில்லை!

      எல்லோரும் காந்தி போல, விவேகானந்தர் போல
      வாழ வேண்டும், என்று சொல்வதற்க்கான அருகதை
      எனக்கில்லை!

      ஆனால், எல்லோரும் அவரவர் குழந்தைகள் மீது முழுமையான அன்பை செலுத்துங்க! என்று கூறுவதற்க்கான, முழு தகுதியும் எனக்கு உண்டு!

      தங்கள் கருத்துக்களுக்கு நன்றி ஐயா!

      Delete